இலண்டன் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், இங்கிலாந்து

முகவரி :
ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்,
யூனிட் பி, பின்புறம், 59 ஸ்டேஷன் ரோடு,
ஹாரோ HA1 2TY, இலண்டன்,
இங்கிலாந்து.
இறைவன்:
ஸ்ரீ சித்தி விநாயகர்
அறிமுகம்:
விநாயகருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இது. இது 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் விநாயகா் தவிர, முருகப்பெருமான், துர்க்கை, பைரவர், நவக்கிரகங்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. ஜார்ஜ் எலியட் சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விநாயகப் பெருமானின் மீது மிகுந்த அன்பு கொண்ட உள்ளூர் பக்தர்களால் இந்தக் கோவில் நிறுவப்பட்டது. கோவிலின் வருடாந்திர திருவிழா (தேவஸ்தானம்) ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்த வருடாந்திர நிகழ்வின் சிறப்பம்சம் தேர் திருவிழா ஆகும். விநாயகப்பெருமான் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில், இப்பகுதியில் உள்ள தெருக்களில் பக்தர்களால் இழுக்கப்பட்டு வலம் வருகிறார். கோவில் தேவஸ்தானத்தின் ஒரு பிரிவான இந்து கலைக் கல்லூரி, வழக்கமான கலை மற்றும் மொழி வகுப்புகளை நடத்துகிறது. அவர்கள் பல்வேறு சமூக கலாசார நிகழ்வுகளை நடத்துகிறார்கள் மற்றும் அனைத்து சமூகங்களையும் ஈர்க்கிறார்கள்.












காலம்
2011-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சஃபாரி சினிமா ( Safari Cinema (Stop W)
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹாரோ & வெல்ட்ஸ்டோன் (Harrow & Wealdstone)
அருகிலுள்ள விமான நிலையம்
ஹீத்ரோ விமான நிலையம் (Heathrow Airport)