இலண்டன் லட்சுமிநாராயணர் கோயில், இங்கிலாந்து

முகவரி :
இங்கிலாந்து லட்சுமி நாராயணர் கோயில்
341 லீட்ச் சாலை, பிராட்ஃபோர்ட் BD3 9LS,
இலண்டன், இங்கிலாந்து
இறைவன்:
லட்சுமி நாராயணர்
அறிமுகம்:
1950, 60-களில் பெரும்பாலான இந்துக்கள் பஞ்சாப், குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்றனர். ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் பல மணி நேரம் உழைத்த அவர்கள், ஒரு கட்டத்தில் தங்களின் சமூக, கலாசார மற்றும் மத நோக்கங்களுக்காக ஒன்றுகூடுவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. இதையடுத்து 1968-ம் ஆண்டு பிராட்போர்டின் இந்து கலாசார சங்கத்தை நிறுவினர். பின்னர் அங்கயே ஒரு மாடி வீட்டில் தற்காலிக கோவிலை அமைத்தனர். பின்னர் அவர்கள் இந்து சமய உறுப்பினர்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை கீர்த்தனையை நடத்தி, பெரிய இடத்திற்கான நிதியை திரட்டினார்கள். 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி, பிராட்போர்டின் முதல் இந்து வழிபாட்டுத் தலமாக, லட்சுமி நாராயணர் கோவில் எழுப்பப்பட்டது.












காலம்
1968-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லீட்ஸ் சாலை முல்கிரேவ் தெரு Leeds Rd Mulgrave Street
அருகிலுள்ள இரயில் நிலையம்
பிராட்ஃபோர்ட்
அருகிலுள்ள விமான நிலையம்
லீட்ஸ் பிராட்ஃபோர்ட் Leeds Bradford Airport