Tuesday Dec 24, 2024

இந்த 2 எழுத்து மந்திரத்தை இப்படி மட்டும் உச்சரித்து பாருங்கள்!

இந்த 2 எழுத்து மந்திரத்தை இப்படி மட்டும் உச்சரித்து பாருங்கள்! எந்தவிதமான கர்மவினையும், நோய் நொடியும் அண்டவே அண்டாது!

இந்த உலகத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான சக்திகள் உள்ளன. உண்மையான தியான நிலையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது அதற்குரிய பலன்களையும் நாம் நேரடியாக பெறுகிறோம்.

சாதாரண மந்திரங்களை உச்சரிப்பதற்கும், கடவுளுடைய திருநாமத்தையே மந்திரமாக உச்சரிக்கும் பொழுதும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு விஷ்ணு பகவான் மந்திரமாக எட்டெழுத்து மந்திரம், ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதும், சிவ பெருமானுக்குரிய, ‘சிவாய நம’ பஞ்சாட்சர மந்திரத்தையும் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு ஒரு விசேஷ சக்திகள் வரும்.

இதனை தொடர்ந்து தியான நிலையில் சொல்லிப் பாருங்கள் அதனுடைய பலன்களே வித்தியாசமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் சொல்லில் அடங்காதவை.

பிரபஞ்சத்தின் பிரணவமாக இருப்பதும் இந்த மந்திரம் தான். பிரணவ மந்திரம் என்று கூறப்படும் ‘ஓம்’ எனும் மந்திரமே உலகில் அனைத்தும் அசைவதற்கு காரணமாக இருக்கிறதாம்.

அறிவியல் ரீதியாக சமீபத்தில் சூரியனில் ‘ஓம்’ எனும் ஒலி கேட்பதாக விஞ்ஞானிகள் கூறினர். இது எவ்வளவு பெரிய விஷயத்திற்கு மூலமாக அமைந்திருக்கிறது என்று பாருங்கள். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்கிற வரைமுறை இருக்கின்றது.

அதன்படி உச்சரிப்பவர்களுக்கு எந்த விதமான கர்ம வினைப்பயனும் நெருங்குவதில்லை. மனிதனாகப் பிறந்து விட்டாலே உடனே கூடவும் நம்முடைய கர்ம வினை பயன்களையும் தூக்கிக் கொண்டு தான் வருகிறோம்.

அதனை சரி செய்யக்கூடிய ஆற்றல்களும் இந்த இரண்டு எழுத்து மந்திரத்திற்கு உண்டு. ஆனால் அதனை உச்சரிப்பதற்கு சரியான வகையில் நீங்கள் தயாராக வேண்டியது அவசியமாகும்.

‘ஓம்’ என்று உச்சரிக்கும் பொழுதே, அதனுடைய அதிர்வலைகள் உடல் முழுவதும் பாய்வதை நாம் உணரலாம். ‘ஓ’ என்று தொடங்கி ‘ம்’ என்று முடியும் பொழுது அதனை நாமாகவே முடிக்கக் கூடாது. ‘ம்’ என்பது அதுவாகவே முடியும் வரை உச்சரிக்க வேண்டும்.

இதனை பூஜை அறை அல்லது உங்களுக்கு வசதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அந்த இடத்தில் தியான நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

அப்படி அமரும் பொழுது நீங்கள் பத்மாசனத்தில் அமர்வது உயர்ந்த நிலையை கொடுக்கும். தினமும் பத்மாசனத்தில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் செய்தால் எவ்வளவு பலன்கள் நமக்கு கிடைக்கும்.

அதிலும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது உடல் முழுவதும் அதனுடைய அதிர்வலைகள் உண்டாகி உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடும்.

பத்மாசனம் என்பது வலது பாதம், இடது தொடையின் மேலும், இடது பாதம், வலது தொடையின் மேலும் வைத்து முதுகு தண்டுவடம் குணியாமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். கைகளை தியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் ஒரு பத்து நிமிடம் மனதில் எதுவாக இருந்தாலும் அதனை தூக்கி எறிந்து விட்டு ஒருமுகப்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் ‘ஓம்’ என்று உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் உச்சரிக்கலாம்.

நீங்கள் உச்சரிக்கும் பொழுதே உங்களுடைய மனதில் மாற்றங்கள் நிகழ்வதை உறுதி செய்து கொள்ளலாம். ‘ஓம்’ என்பது தமிழ் கடவுள் முருகனுக்கு மட்டுமல்ல. சக்தியிடம் இருந்து பெறப்பட்டது தான் ‘ஓம்’. ‘ஓம்’ இல்லை என்றால் எந்த உயிர்களும் இல்லை.

இத்தகைய மகிமை வாய்ந்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை ஒவ்வொருவரும் பத்மாசன நிலையில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.✍🏼🌹

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top