ஆய்க்குடி தேவராஜ மகா சாஸ்தா திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு தேவராஜ மகா சாஸ்தா திருக்கோயில், ஆய்க்குடி, முகுந்தனூர் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் – 61370. போன்: +91 94884 15137, 94439 46137
இறைவன்
இறைவன்: தேவராஜ மகா சாஸ்தா இறைவி: பூரண, புஷ்கலா
அறிமுகம்
தேவராஜ மகா சாஸ்தா கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்குடியில் அமைந்துள்ள கோயிலாகும். மூலவர் தேவராஜ மகா சாஸ்தா. தாய்மார்கள் பூர்ணா மற்றும் புஷ்கலா. ஸ்தல விருட்சம் வேம்பு மற்றும் தீர்த்தம் தேவ தீர்த்தம். இக்கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாஸ்தாவை தங்கள் குலதெய்வமாகப் போற்றுபவர்கள் அளித்த நிதியில் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புராண முக்கியத்துவம்
சோழ வளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 13 கி.மீ. தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. வயல் சூழ்ந்த பகுதியில் காவல் தெய்வமாக விளங்குகிறது. 48 விதமான துர்தேவதைகள் இக்கோயிலில் சாஸ்தாவை பூஜித்து சாப, பாவ விமோசனங்களை ஏற்றுள்ளனர். பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட தேவர்கள் பூஜை செய்ததால் இக்கோயில் மூலவருக்கு தேவராஜா சுவாமி (தெய்வரங்கப்பெருமான்) எனப்பெயர் வந்துள்ளது. இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ள பக்தர்கள் முக்கிய விசேஷ தினங்களில் இங்கு வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் குல தெய்வ வழிபாடு நடத்துபவர்கள் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைகள்
பிரதி மாதம் பவுர்ணமி பூஜை செய்தல், பில்லி, சூனியம் முற்பட்ட பகைகள் மற்றும் தோஷங்கள் நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. மேலும் சித்திரை மாத பூஜை, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
வயல் சூழ்ந்தபகுதியில் கோயில் உள்ளது. பல்வேறு இந்திய வம்சா வழியினர்கள் பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குலதெய்வாக உள்ளதால் பலரும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலை சுற்றி நான்கு திசைகள் மற்றும் அருகில் பழமை வாய்ந்த கயிலாசநாதர் மற்றும் வலம்புரி விநாயகர் கோயில் இருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மேற்கு பக்கம் வாயிலில், எதிரில் தீர்த்தக்குளம், மூலவர் தனி விமானம் மூன்று கலசம், வடக்குப் பக்கம் பெத்தாரணசுவாமி மற்றும் பேச்சியம்மன் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பக்கம் ராக்கப்பெருமாள் அவரை நோக்கி அஸ்வராஜன் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். மூலவர் பூரண புஷ்கலாவுடன் தேவராஜா சாஸ்தா மேற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். பலி பீடம் யானையும் கிழக்குப் பக்கத்திலும், உத்தராண்டராயர் வடக்கு பக்கமும் அருள்பாலிக்கின்றனர். நடுவில் தல விருட்சம். வீரன் வெளிப்பகுதியில் கிழக்கு நோக்கியும், பெத்தனாநாத சுவாமி, கணநாதர், இருளன், சதி மற்றும் பதியுடனும், பேச்சியம்மன் தெற்கு பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். ராகவப்பெருமாள், அஸ்வத்ராஜன் மேற்குப் பக்கமும், தூண்டில்காரன் வடக்கு நோக்கியும், அஸ்வராஜன் மேற்கு நோக்கியும், வழிக்கறையான் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மூன்று வகையான மகா மண்டபத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இடவசதியில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 500 முதல் ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டதாக கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
திருவிழாக்கள்
தமிழ்வருடப்பிறப்பு, சித்திரை செவ்வாய் கடைசி பூஜை, பிரதிமாதம் பவுர்ணமி பூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முகுந்தனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி