அருள்மிகு மிதிலா சக்தி பீடத் திருக்கோவில், பீகார்

முகவரி
அருள்மிகு மிதிலா (உமாதேவி)சக்தி பீடத்திருக்கோவில் லஹேரியசரை, தர்பங்கா, ஜானக்பூர், பீகார் – 846001
இறைவன்
சக்தி: உமாதேவி பைரவர்: மஹோதரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது தோள்
அறிமுகம்
நேபாளத்தின் ஜானக்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் பீகாரின் மதுபானி மாவட்டத்தின் பேனிபட்டி உள்ள உச்சய்த் என்ற கிராமத்தில் மிதிலாஞ்சல் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். தேவியின் சிலை “குப்தர் காலம்’ என்று அறியப்படுகிறது. பெரும்புலவர் காளிதாஸ்க்கு இந்த இடத்தில்தான் கல்வியறிவு கிடைத்தது என்று கூறப்படுகிறது. இங்கே சதி தேவியை ‘உமாதேவி’ என்றும், பைரவரை ‘மஹோதரர்’ என்றும் அழைக்கிறார்கள். விஷ்ணு, சதியை இழந்த துக்கத்திலிருந்து சிவனை விடுவிப்பதற்காக, தனது ‘சுதர்சன் சக்கரத்தை’ பயன்படுத்தி சதி தேவியின் இடது தோள் ப்பகுதி விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது தோள் இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
ராம் நவமி, சிவராத்திரி, துர்கா பூஜை, காளி பூஜை மற்றும் ஹோலி, நவராத்திரி, ஜெயந்தி ஆகியன் இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தர்பங்கா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜானக்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாட்னா