Friday Dec 27, 2024

அருள்மிகு துர்கா கோயில், அய்கொளெ

முகவரி

அருள்மிகு துர்கா கோயில் – அய்ஹோல் பாகல்கோட், கர்நாடகா கர்நாடகா 587124 இந்தியா

இறைவன்

இறைவன்: சிவன் மற்றும் விஷ்ணு

அறிமுகம்

துர்கா கோயில் கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ளது. துர்க்கா கோயில் அல்லது கோட்டை கோயில் என்றறியப்படும் இக்கோயில், அய்கொளெயில் உள்ள கோயில்களில் நன்கறியப்பட்ட கோயிலாகும். புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இக்கோயிலின் காலம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது

புராண முக்கியத்துவம்

துர்கை கோயில் என்று அழைக்கப்பட்டாலும், இது பௌத்த விகாரையின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. சைவம், வைஷ்ணவம், சக்தி வழிபாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா என்பதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது, அஜந்தாவில் காணப்படும் குகையின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. துர்கை கோயில் என்று அழைக்கக் காரணம், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கியபடி போர்க் கோலத்தில் நின்றுகொண்டிருக்கிறாள் துர்கை. துர்கைக்கு வலப்புறத்தில் சிம்மம் ஆவேசத்துடன் நின்றுகொண்டிருக்க, இடப்புறத்தில் நின்றுகொண்டிருக்கும் பசு, சிம்மத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேவியைத் தன் நாவினால் தடவிக்கொடுத்தபடி இருக்கிறது. வேறெங்கும் காணக்கிடைக்காத அதி அற்புதமான காட்சி இது. போர்க்கோலத்தில் நின்றுகொண்டிருந்தாலும் துர்கையின் முகம் அமைதியாகக் காட்சியளிக்கிறது. பசுவின் தீண்டுதல் துர்க்கையின் அமைதிக்குக் காரணமாக இருக்கலாம். இந்தக் கோலத்தில் காட்சிதரும் துர்கையைக் காண்பதற்காகவேனும் அய்ஹோலுக்கு ஒருமுறை சென்று வர வேண்டும். இது மட்டுமல்லாமல், நந்திமீது சாய்ந்துகொண்டிருக்கும் ரிஷபாந்தக மூர்த்தி, பூமிதேவியை மீட்டு வந்த வராக மூர்த்தியின் சிற்பம் ஆகியவை ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகாகக் காட்சியளிக்கின்றன.

காலம்

7 to 10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அய்ஹோல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாகல்கோட்

அருகிலுள்ள விமான நிலையம்

பெல்காம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top