அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/sri-semmalai-nathar-temple-keelaiyur.jpg)
முகவரி
அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர் – அஞ்சல் – 611 103, நாகப்பட்டினம் (வழி).
இறைவன்
இறைவன்: செம்மலைநாதர் இறைவன்: வந்தமரும்பொன்குழலாள்
அறிமுகம்
மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர். வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது
புராண முக்கியத்துவம்
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன. இவ்வூரை’அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்’ என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
நம்பிக்கைகள்
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது இத்தலத்திற்கு வந்து 5 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டனர் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் காட்சி அளிக்கும் மூலவர் அருணாசலேஸ்வரரை அர்ஜுனன் வழிபட்டான் என்று தலபுராணம் கூறுகிறது. மூலவர் நீளமான உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவனுக்கு செம்மலைநாதர் என்று மற்றொரு பெயரும் வழங்கி வருகிறது. கருவறைச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவைமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்துறைப்பூண்டி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி