Sunday Sep 08, 2024

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமூலஸ்தானம்

முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமூலஸ்தானம் , காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 301.

இறைவன்

இறைவன்: கைலாசநாதர், இறைவி: காமாட்சி

அறிமுகம்

முற்காலச் சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் அழகான சிற்பங்கள் உள்ளன.சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், முட்புதர்களும் காணப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது. அகத்தியர் சிவனை வணங்குவது போன்ற சிற்பம் உள்ளது. கோயில் பராமரிப்புக்காக தரப்பட்ட கொடை பற்றிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன. நூசசோழன் எனும் மன்னன் இக்கோயிலை கட்டியதாக கூறுகின்றனர். துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய மூவரும் உலக இன்னல்கள் தீர இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ பார்வதி திருமணத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தபோது வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயரவே, சிவன் அகத்தியரை அழைத்து நிலையைச் சரிசெய்வதற்காக தென் பகுதிக்குச் செல்லும்படி பணித்தார். அகத்தியர் தான் சென்ற இடங்களில் லிங்கத் திருமேனிகளை அமைத்து வழிபட்டுச் சென்றார். அவ்வாறான லிங்கத்திருமேனிகளில் இக்கோயிலில் உள்ளதும் ஒன்றாகும். பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய கோயில் எதிரில் குளம் ஒன்றுள்ளது. இதில் சில ஆண்டுகளின்முன்னர் இக்கோயிலின் ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். பிரகார தெய்வங்கள் விநாயகர் முருகன் ஆகியோர். உள்ளனர். வடகிழக்கில் ஒரு கிணறும், சனிபகவான் பெரிய லிங்க பாணம் அருகில் வழிபடும் கோலத்தில் அகத்தியர் பெரிய உருவத்தில் உள்ளார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னார் கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top