Friday Dec 27, 2024

அய்யாவாடி பிரத்யங்கிராதேவி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர் மாவட்டம் – 621802. போன்: +91 – 435- 246 3414, 94431 24347.

இறைவன்

இறைவி: பிரத்யங்கிராதேவி

அறிமுகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோயில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அய்யாவாடி என்னுமிடத்தில், உப்பிலியப்பன் கோயிலிலிருந்து நாச்சியார்கோயில் செல்லும்வழியில் இக்கோயில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் இலட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள். இவர் சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதாகக் கூறுவர். தேவி மூன்று கண்கள் உடையவள். இங்கு வந்து தேவியை வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமாவாசை, பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்தலைச் சிறப்பாகக் கருதுகின்றனர்.

புராண முக்கியத்துவம்

மகாவிஷ்ணுராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி’க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரவீம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.

நம்பிக்கைகள்

நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பிரத்யங்கிராதேவி: இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்வீ றிருக்கிறாள். மிளகாய் வத்தல் யாகம்: இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம். மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திருவிழாக்கள்

இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அய்யாவடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநாகேஸ்வரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top