அகரசேத்தூர் பிரதாபசிம்மேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
அகரசேத்தூர் பிரதாப சிம்மேஸ்வரர் சிவன்கோயில்,
அகரசேத்தூர், திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609601.
இறைவன்:
பிரதாப சிம்மேஸ்வரர்
இறைவி:
சிவகாமசுந்தரி
அறிமுகம்:
சேத்தூர் என்பது காரைக்கால் / திருநள்ளாற்றின் மேற்கில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. சேத்தூர் என்றும் அகரசேத்தூர் எனவும் இரு பிரிவாக உள்ளது இவ்வூரில் இரு பெரும் சிவாலயங்கள் உள்ளன. ஒன்று ஏகாம்பரேஸ்வரர் மற்றொன்று பிரதாபசிம்மேஸ்வரம் என அழைக்கப்பட்ட இக்கோயில். பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்தது, புதுச்சேரி அரசின் முயற்சியால் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக செய்யப்பட்டு குடமுழுக்கு கண்டுள்ளது.
பிரதாபசிம்மன் எனும் மராட்டிய மன்னர் தஞ்சையை ஆண்டு வந்தார் அவரது காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாக இருக்க கூடும். இறைவன் பிரதாப சிம்மேஸ்வரர் கிழக்கு நோக்கிய கருங்கல் கருவறையில் பெரிய லிங்கமூர்த்தியாக இறைவனின் முன்னர் அழகிய நீண்ட மண்டபம் அமைந்துள்ளது, அதில் நந்தி, பலிபீடம், உயர்ந்த செப்புகொடிமரமும் உள்ளன. கருவறை வாயிலில் பாலவிநாயகர், நால்வர் சிலைகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன் காசிவிஸ்வநாதர் சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். சண்டேசர் தன் வழமையான பாகத்தில் உள்ளார், ஆனால் பிற தலங்களில் காண இயலாத அதிசயமாக இரு சண்டேசர்கள் உள்ளனர்.
முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய நடராஜபெருமான் சன்னதி உள்ளது. அருகில் தெற்கு நோக்கிய சிவகாமசுந்தரி திருக்கோயிலும் இணைந்துள்ளது. இறைவியின் கருவறையை சுற்றி வரும்போது சண்டேஸ்வரி சன்னதியை காணலாம். வடகிழக்கில் கால பைரவர், நவகிரகங்கள், சனிபகவான் சூரியன் உள்ளனர். 2018ன் முன்னர் இதன் சிதிலமடைந்த நுழைவாயில் மட்டுமே இருந்தது. இக்கோயிலில் இருந்த மூலலிங்கம் அம்பிகை மற்றும் பிற தெய்வங்கள் அருகில் ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்தன.










காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரசேத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி