மணக்கோடு சந்திரமௌலீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/363780532_9677367302336293_9138340144324404126_n.jpg)
முகவரி :
மணக்கோடு சந்திரமௌலீஸ்வரர் சிவன்கோயில்,
மணக்கோடு, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614207.
இறைவன்:
சந்திரமௌலீஸ்வரர்
அறிமுகம்:
பாபநாசத்தில் இருந்து ஆவூர்-க்கு செல்லும் சிறிய சாலையில் நான்காவது கிமீல் உள்ளது இந்த மணக்கோடு. தற்போது பெரியதாக நான்குவழி சாலை இவ்வூரை ஒட்டி அமைக்கப்பட்டு வருகிறது. சுள்ளான் எனும் ஒரு ஆறு இவ்வூரை ஒட்டி செல்கிறது. மணற்குன்று என்பது மருவி மணக்கோடு ஆகி இருக்கலாம். ஊரிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது திருக்கோயில். பழமையான கோயில் இன்றில்லை, லிங்க மூர்த்தி மட்டும் இருந்தது போலும். சந்திரன் வழிபட்டதால் சந்திரமௌலீஸ்வரர் எனப்படுகிறார். இறைவன் கிழக்கு நோக்கிய தகர கொட்டகையில் உள்ளார் அம்பிகை சற்று தள்ளி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. சந்திர தோஷம் உள்ளவர்கள் அவசியம் வழிபடவேண்டிய திருக்கோயில். கோயில் பெரிசா இல்லையே? சின்னதா இருக்கே! நீங்க சொல்லும் தோஷ நிவர்த்தி கிடைக்குமான்னு நினைக்காதீங்க, நீங்க நினைக்கும் பெரிய கோடு பக்கத்தில் அதைவிட பெரிய கோடு போட்டால் இது சின்ன கோடு ஆகிவிடும். அதனால் கோடுகள் என்பன அளவீடுகள் இல்லை, கீர்த்திகளை மட்டுமே அளவீடுகளாக கொள்ளவேண்டும் இதுவே மணக்கோடு சொல்லும் அறிவுரை.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363304478_9677367619002928_472966715289724920_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363780532_9677367302336293_9138340144324404126_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363802206_9677367345669622_6789035310223091515_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363813316_9677367132336310_7531353194202331137_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363816773_9677367105669646_6120379376694398401_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/07/363818078_9677368025669554_1297635556207980078_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்கோடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி