பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் (கோதண்ட ராமர் கோவில்), திருவாரூர்
முகவரி
பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் (கோதண்ட ராமர் கோவில்), பருத்தியூர், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: இராமர்
அறிமுகம்
அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். தெற்கு நோக்கிய சன்னதியில் ராம பரிவாரத்தைக் காணலாம். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி இக்கோயிலை எடுத்துக்கட்டினார். அவர் இந்தியா முழுவதம் ராமர் கதை, ராமநாத பாராயணம், ராமர் மேல் சங்கீதங்கள் ஆகியவற்றைப் பாடி இக்கோயிலை அமைத்தார். அழகு மிக்க ராமருக்கு சிறப்பான சிற்பங்கள் அமைந்த கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன.
புராண முக்கியத்துவம்
இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை. ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார்.
நம்பிக்கைகள்
இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது.
திருவிழாக்கள்
இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பருத்தியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி