நெய்வேலி நடராஜர் கோயில், கடலூர்

முகவரி :
நெய்வேலி நடராஜர் கோயில்,
குறிஞ்சிப்பாடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607801.
இறைவன்:
நடராஜர்
இறைவி:
சிவகாமி
அறிமுகம்:
நெய்வேலியில் நடராஜர் கோயில் ஒன்று உள்ளது. இதில், உலகிலேயே மிகப்பெரிய சிலையாக நடராஜர் பஞ்சலோக சிலையாக உள்ளார். 10 அடி 1 அங்குலம் உயரம் 2,420 கிலோ எடை கொண்ட இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்ட சிவகாமி சிலையும் உடன் உள்ளது.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் செல்லும் ஜாகிர் உசேன் சாலையில் இருந்து பிரியும் வேலூர் சாலையில் பிளாக்- 16ல் இக்கோயில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கி பெரிய மண்டபத்தில் நின்றாடும் கோலத்தில் உள்ளார். நடராஜர். பஞ்ச சபைகள் வரிசையில் இக்கோயில் ஆறாவதாக பளிங்கு சபை எனப்படுகிறது. நடராஜர் முன் மண்டபம் தியான மண்டபமாக செயல்படுகிறது. இப்பெருங்கோயிலை ஒட்டி கிழக்கு நோக்கி சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இறைவன்- செம்பொற்சோதிநாதர் இறைவி – அறம்வளர்த்த நாயகி
இவ்விடத்தில் 5௦௦ ஆண்டு பழங்கோயில் ஒன்றிருந்தது என்கின்றனர். அதே இடத்தில் இகோயில் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது எனலாம். இறைவன் கிழக்கும் இறைவி தெற்கு நோக்கி உள்ளனர். விநாயகர் மற்றும் முருகன் இறைவனது கருவறை வாயிலில் உள்ளனர். அழகிய நந்தி இறைவன் முன்னர் உள்ளது. பிரகாரத்தில் ஜெய துர்க்கை எனும் பெயரில் ஒரு பெரிய துர்க்கை சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அருகில் கிழக்கு நோக்கிய சனிபகவான் சனனதி ஒன்றும் உள்ளது. ஒரு நாகலிங்க மரம் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது இறைவன் கருவறை பின்புறத்தில். வடபுறம் சண்டேசர் சன்னதியும், தசபுஜ பைரவர் சன்னதியும் உள்ளது.
1987 ஆம் ஆண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவன் கோயில் வடபுறம் தென் திசை நோக்கியபடி திருத்தொண்டர் திருக்கோயில் எனும் பெயரில் 63 நாயன்மார்கள் உலோக திருமேனிகளாக வார்க்கப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டு உள்ளனர்.
நம்பிக்கைகள்:
மனுநீதி என்ற பழங்கால நடைமுறையைப் பின்பற்றும் வகையில், பக்தர்கள் தங்கள் துயரங்களை ஒரு காகிதத்தில் எழுதி அதில் வைத்து மூன்று முறை மணியை அடிக்க ஒரு பிரார்த்தனை பெட்டி உள்ளது. இந்த மனுக்களை தீட்சிதர்கள் காலை பூஜை செய்யும் போது சேகரித்து சிவபெருமானின் முன் ரகசியமாக வாசித்து தீயில் எரிப்பார்கள். பக்தர்கள் தங்கள் விருப்பத்தை இறைவன் ஏற்ற பிறகு, ஒரு நன்றி கடிதம் எழுதி பெட்டியில் போடுகிறார்கள்.
திருவிழாக்கள்:
நெய்வேலி நடராஜர் கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பக்தர்களுக்காக திறந்திருக்கும். இக்கோயிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்களின் குருபூஜை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன, அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கை பற்றிய சொற்பொழிவும் நடத்தப்படுகிறது. இக்கோயில் பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது,











காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெய்வேலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நெய்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி