திகம்பர் சமணக் திருக்கோயில்

முகவரி
திகம்பர் சமணக் திருக்கோயில், நேதாஜி சுபாஷ் மார்க், சாந்தினி சௌக், தில்லி – 110006
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
திகம்பர் சமணக் கோயில், சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது. இக்கோயில் செந்நிற மணற்கல்லால் 1658ம் ஆண்டில் நிறுவப்பட்டது.
புராண முக்கியத்துவம்
முகாலயப் பேரரசர் சாசகான் ஆட்சியின் போது (1628–1658) செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளுடன் பழைய தில்லி நகரம் நிறுவப்பட்ட போது, சமண சமய வணிகர்களை அழைத்து தில்லி நகரப் பகுதிகளில் வணிகம் செய்ய கேட்டுக் கொண்டார். சமணர்கள் இப்பகுதியில் சிறு கோயில் கட்டி, பார்சுவநாருக்கு அர்ப்பணித்தனர். 1800 – 1807ல் பிரித்தானிய இந்தியா அரசில் அதிகாரியாக இருந்த இராஜா ஹர்சுக் இராய் என்பவர், பழைய கோயிலை சீரமைத்து, கோபுரங்களுடன் புதிய கோயிலை நிறுவினார். இச்சமணர் கோயிலுக்கு அருகில் உள்ள கௌரி சங்கர் கோயிலை, மராத்தியப் பேரரசின் தில்லி ஆளுநராக இருந்த சிந்தியா குல அப்பா கங்காதரர் என்பவர் 1761ல் கட்டினார். மூலவர் பார்சுவநாதருடன் மகாவீரர், ரிசபநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் பின்புறத்தில் பறவைகளுக்கான மருத்துவ மனை உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 1957ல் நிறுவப்பட்ட பறவைகள் மருத்துவ மனையில் ஆண்டிற்கு 15,000 பறவைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.
காலம்
1656
நிர்வகிக்கப்படுகிறது
தில்லி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவப்பு கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தில்லி
அருகிலுள்ள விமான நிலையம்
தில்லி