சேத்தூர் அமுதீஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி :
சேத்தூர் அமுதீஸ்வரர் சிவன் கோயில்,
சேத்தூர், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609112.
இறைவன்:
அமுதீஸ்வரர்
இறைவி:
திரிபகமாலினி
அறிமுகம்:
சோழ மன்னர்கள் காலத்தில் தஞ்சை நெல்களஞ்சியத்திற்கு முதல் நெல் இங்கிருந்து தான் செல்லுமாம், அதனால் இவ்வூர் சோற்றூர் என அழைக்கப்பட்டு இப்போது சேத்தூர் என அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சாலையில், திருப்புங்கூர் தாண்டி வரும் சேத்தூர் பேருந்து நிறுத்தம் இறங்கி, தென்புறம் 2 கி.மீ தூரத்தில், உள்ளது. கடந்த 26.06.2022 பிரதோஷ நாளில் குடமுழுக்கு செய்யப்பட்டது. ஆலயம், நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முழுதும் சிதைந்து புதைந்து விட்டிருந்தபடியால் 1997ல் தோண்டியெடுத்து ஒரு விநாயகர் ஆலயமும், அருகில் ஒரு சிறிய கல்நார் கொட்டகையில் சிவன் சிலையும் வைத்து வணங்கி, வழிபாடு நடத்திவந்தார்கள். தற்போது இந்த இடத்தின் பின்புறத்தில் முன்பு ஆலயம் இருந்த இடத்தில், புதிய கோயில் கட்டியுள்ளார்கள்.
புதிய ஆலயம், நந்தி மண்டபம், கிழக்கு நோக்கிய சிவன், தென்புறம் நோக்கிய அம்பாள் இரண்டையும் இணைக்கிறது ஒரு முகப்பு மண்டபம். கருவறை பின்புறம், புதிய சிலைகளுடன் தனித்தனி கோபுர வடிவ மாடங்களில் விநாயகர், முருகன் மகாலட்சுமி ஐயப்பன் உள்ளனர். இறைவன் அமுதீஸ்வரர் இறைவி திரிபகமாலினி சண்டிகேஸ்வரர் பழமையான மூர்த்திகள் மற்றவை புதிதாக உருவாக்கப்பட்டவை. ஒரு ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி உள்ளார். உயர்ந்த ஈச்ச மரம் ஒன்று மேடை கட்டி நிற்கிறது. அதனடியில் ஒரு உடைந்த லிங்க பீடம் வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் நவகிரகங்கள், பைரவர். அமைந்துள்ளது. விநாயகர் செல்லியம்மன் மகாமாரியம்மன், அய்யனார் ஆலயங்களும், உபயதாரர்கள் ஊர்மக்களும் இணைந்து குடமுழுக்கு சிறப்பாக நடத்தியுள்ளனர்.









காலம்
700 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி