கொத்தமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
கொத்தமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில்,
கொத்தமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
பல கொத்தமங்கங்கலங்கள் ஆங்காங்கே உள்ளன, இவ்வூர் திருமருகல் ஒன்றியத்தில் நிரவி அருகில் உள்ளது. ஆனால் இதற்க்கு வழி திட்டச்சேரியில் இருந்து வாழ்மங்கலம் 2 கிமீ அங்கிருந்து வடக்கில் பனங்காட்டூர் வழி கொத்தமங்கலம் 5 ½ கிமீ. மன்னன் திருமலை ராயன் 108 கோயில்களை இப்பகுதியில் கட்டுகிறார். அதில் பல சிதைந்துள்ளன, சில மீளுருவாக்கம் அடைந்துள்ளன. அதில் ஒன்று தான் இந்த கொத்தமங்கலம். இங்கு ஒரு கிழக்கு நோக்கிய ஒரு சிவாலயம் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
கோயிலின் கிழக்கில் ஒரு பெரிய குளமும் உள்ளது. இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி இரு கருவறைகளையும் சேர்க்கிறது ஒரு மண்டபம். கிழக்கில் ஒரு வாயில் தென்புறமும் ஒரு வாயில் உள்ளது. கிழக்கு வாயிலின் மேல்புறம் சுதை வேலைப்பாடுகள் உள்ளன. இந்த மண்டபத்தின் நடுவில் நந்தி உள்ளார். அந்த நந்தி கட்டுமானத்திலேயே விநாயகர் ஒரு மாடத்தில் உள்ளார். கருவறை அர்த்த மண்டபத்தில் இறைவனின் இருபுறமும் விநாயகரும் பாலமுருகனும் உள்ளனர். கோஷ்ட தெய்வங்கள் பரிவார தெய்வங்கள் ஏதுமில்லை. எளிமையாக உள்ளார் இறைவன்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொத்தமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி