கொட்டாரக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
கொட்டாரக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
கொட்டாரக்குடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613704.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி.
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிமீ-ல் காட்டாற்றின் தென்கரையில் சிறிய சாலை கொட்டாரக்குடி நோக்கி செல்கிறது. நாகை மாவட்டத்திலும் ஒரு கொட்டாரக்குடி உள்ளது. சாலையின் இருமருங்கிலும் வளர்ந்து நிற்கிறது ஊர். சாலையினை ஒட்டி ஒரு பெரிய குளமும் அதன்வடக்கு கரையில் சிவன்கோயில் ஒன்றும் உளளன. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் சிறிய கோயில்தான். இறைவன் –காசி விஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி.
கிழக்கு நோக்கிய சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார் அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். கருவறை வாயிலில் விநாயகரும் இரு லிங்க பாணங்களும் உள்ளன, மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். நேர் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. கருவறை கோட்டங்கள் என எதுவும் இல்லை, வடக்கில் துர்க்கை கருவறை ஒட்டி ஒரு மண்டபத்தில் உள்ளார். அம்மன் கருவறை ஒட்டி ஒரு மாடத்தில் நாகர் சிலை உள்ளது. வடகிழக்கில் ஒரு கிணறு உள்ளது. இரு லிங்க பாணன்களின் அளவினை பார்த்தால் சோழர்காலம் அல்லது விஜயநகர காலம் போல தொன்மை இருக்கலாம். ஆனால் இன்று இருக்கும் விஸ்வநாதர் கோயிலின் காலம் சில நூறாண்டுகள் எனலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொட்டாரக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி