ஊ.மங்கலம் சிவன் கோயில், கடலூர்

முகவரி :
ஊ.மங்கலம் சிவன்கோயில்,
ஊ.மங்கலம், குறிஞ்சிப்பாடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607804.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
வடலூர் – விருத்தாசலம் சாலையில் மந்தாரகுப்பம் தாண்டியதும் சில கிமீ தூரத்தில் வருகிறது இந்த ஊ.மங்கலம். அருகில் உள்ள ஊத்தங்கால் கிராமத்தின் உட்கிராமம் என்பதால் இந்த பெயர். ஆனால் புள்ளி காணாமல் போய் ஊமங்கலம் என ஆகிவிட்டது. இரண்டாவது அனல்மின் நிலையத்தினை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தின் வடக்கில் செல்லும் சிறிய சாலையில் சென்றால் சிவன்கோயிலை அடையலாம்.
ஊர் மக்கள் மாரியம்மன் கோயில் ஒன்றும் விநாயகர் கோயில் ஒன்றினையும் கட்டி முடித்து குடமுழுக்கு வைக்கும் நேரத்தில், அர்ச்சகர் இரண்டு கோயில்களுக்கு செய்வது ஊருக்கு நல்லதல்ல மூன்று கோயிலாக உருவாக்குங்கள் அதனையும் சேர்த்து செய்துவிடலாம் என கூற மூன்றாவது கோயிலை உடனே உருவாக்கக் முடியுமா என எண்ணி சோர்ந்திட, அருகாமை குளக்கரையில் இருக்கும் பின்னமான லிங்கத்தை கொண்டுவந்து வைத்து அதற்க்கு ஒரு மேடை மற்றும் தற்காலிக கூரை ஒன்றினை அமைத்து மூன்றாக குடமுழுக்கு செய்தனர்.
பின்னம் அடைந்த பாணம் என்பதால் அதற்க்கு பித்தளை கவசமிடப்பட்டது. சாதாரண மேடையில் அமர்ந்த சிவன் பின்னாளில் படிக்கட்டுகளுடன் கூடிய உயர்ந்த மேடையும் அவருக்கு மேல் ஐந்தலை நாகம் ஒன்று குடைபிடிக்குமாறு சுதைவேலை செய்யப்பட்டு அழகிய சிமென்ட் கூரையும் அமைத்துவிட்டனர். தென்புறம் தக்ஷணமூர்த்தியும் வடகிழக்கில் நவகிரகங்களும் வந்தமர்ந்துவிட மாதாந்திர பூஜைகள் நடந்தேறிவருகின்றன. தானேவந்தமர்ந்த ஈசனை இவ்வழி செல்வோர் தரிசனம் செய்வீர்.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊ.மங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி