Friday Sep 20, 2024

இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில், தர்மபுரி

முகவரி :

இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்,

இருமத்தூர்,

தர்மபுரி மாவட்டம் – 635202.

இறைவி:

கொல்லாபுரியம்மன்

அறிமுகம்:

இருமத்தூர்கொல்லாபுரியம்மன்கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி இருமத்தூர் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. தருமபுரி நகரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், இருமத்தூர் கிராமத்தில் சாலையோரத்தில் அமைந்துள்ளது திருக்கோயில்.  இங்கு அம்மன்  சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாள்.

நம்பிக்கைகள்:

திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக இக்கோயிலில் புதுமையான வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இந்த புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழிகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

திருவிழாக்கள்:

இக்கோயிலில் மூன்று காலப் பூஜைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடப்பிறப்பு, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இருமத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top