இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623526 PH:9443113025,04573-221223
இறைவன்
இறைவன்: இராமநாதசுவாமி இறைவி: பர்வதவர்த்தினி
அறிமுகம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.
புராண முக்கியத்துவம்
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.
நம்பிக்கைகள்
தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.அம்மன் சன்னதி. இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம் வ.எண் தீர்த்தங்கள் விபரம் வ.எண் தீர்த்தங்கள் விபரம் 1 மகாலட்சுமி தீர்த்தம் 12 கெந்தமாதன தீர்த்தம் 2 சாவித்திரி தீர்த்தம் 13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம் 3 காயத்திரி தீர்த்தம் 14 கங்கா தீர்த்தம் 4 சரஸ்வதி தீர்த்தம் 15 யமுனா தீர்த்தம் 5 சங்கு தீர்த்தம் 16 கயா தீர்த்தம் 6 சக்கர தீர்த்தம் 17 சர்வ தீர்த்தம் 7 சேது மாதவர் தீர்த்தம் 18 சிவ தீர்த்தம் 8 நள தீர்த்தம் 19 சாத்யாமமிர்த தீர்த்தம் 9 நீல தீர்த்தம் 20 சூரிய தீர்த்தம் 10 கவய தீர்த்தம் 21 சந்திர தீர்த்தம் 11 கவாட்ச தீர்த்தம் 22 கோடி தீர்த்தம்
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராமேஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை