ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி :
அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில்,
கும்பாசி, உடுப்பி மாவட்டம்
கர்நாடகா மாநிலம்.
போன்: +91 8254- 261 079, 267 397, 272 221.
இறைவன்:
விநாயகர்
அறிமுகம்:
உடுப்பி மாவட்டத்தில் குந்தபுராவில் இருந்து தெற்கே 9 கிமீ தொலைவில் ஆனைகுட்டே அமைந்துள்ளது. ஆனைகுட்டே கும்பாசி என்றும் அழைக்கப்படுகிறது. கும்பாசி என்ற பெயர் கும்பாசுரன் என்ற அரக்கனால் உருவானதாக கூறப்படுகிறது. ஆனைகுட்டே கர்நாடகாவின் ஏழு ‘முக்தி ஸ்தலங்களில்’ (பரசுராம க்ஷேத்திரம்) வெகுமதி பெற்றவர். ஆனேகுட்டேயில் உள்ள கோயில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனேகுட்டே என்பது இரண்டு சொற்களின் கலவையாகும் – ‘யானை’ மற்றும் ‘குடே’, அதாவது ‘ஆனை’ மற்றும் ‘குடே’, இது யானைத் தலைக் கடவுளான விநாயகரின் இருப்பிடமாக இருப்பதால் ‘குன்று’ என்பதைக் குறிக்கிறது. ஆனைகுட்டே ஸ்ரீ மகாகணபதி கும்பாசியில் அமைந்துள்ளது, ஆனைகுட்டே மங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் குந்தாப்பூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
அரபிக்கடல் ஓரத்திலுள்ள மங்களூரு ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாக இருந்தது. இங்கு வறட்சி நிலவியது. பசியில் வாடிய முனிவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்த மக்களும் அகத்திய முனிவரிடம் சென்று, வறட்சியிலிருந்து தங்களை காப்பாற்ற கோரினர். அவர் வருண பகவானின் அருள் வேண்டி தவமிருந்தார். அப்போது கும்பாசுரன் என்ற அரக்கன், அவரை தவமிருக்க விடாமல் தொந்தரவு செய்தான். அவனைத் தண்டிக்குமாறு, அகத்தியர் விநாயகரிடம் வேண்டினார். கும்பாசுரனை அழிக்கும் சக்தி, அவனுக்கு சமபலமுள்ளவனும், பாண்டவர்களில் ஒருவனுமான பீமசேனனுக்கே இருந்தது.
விநாயகர் யானை வடிவெடுத்து தும்பிக்கையில் ஒரு ஆயுதத்தை எடுத்துச் சென்றார். யானை ஒன்று ஆயுதத்துடன் வருவதைக் கண்ட பீமபீ ன், அதை கைப்பற்றும் நோக்கத்தில் செல்ல, அது கீழே போட்டு விட்டு ஓடியது. அந்த ஆயுதத்தால் கும்பாசுரன் வீழ்வீ த்தப் பட்டான். விநாயகரின் ஆயுதத்தால் உயிர் பிரியும் நிலை ஏற்பட்டதால், அவனுக்கு ஞானம் ஏற்பட்டது. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து திருந்தினான். மழையும் பொழிந்து அவ்வூர் மீண்டும் செழிப்பானது. மகிழ்ந்த முனிவர்கள் தங்கள் குறைதீர்த்த இடத்தில் எழுந்தருள வேண்டுமென விநாயகரை வேண்டினர். கும்பாசுரன் கடைசி நேரத்தில் மனம் திருந்தியதால், அந்த இடத்திற்கு அவனது பெயரால் கும்பாசி என்ற பெயர் ஏற்பட்டது. கும்பாசியிலுள்ள ஆனேகுட்டே பகுதியில் கோயில் இருக்கிறது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது.
நம்பிக்கைகள்:
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க கண ஹோமம் நடத்தப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்) உள்ளார். தமிழக விநாயகர் அமைப்பில் இல்லாமல், யானை போல் சிலையமைப்பு உள்ளது. இதை சுயம்பு விநாயகர் என்றும் சொல்கின்றனர். திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது. இவரை பக்தர்கள் விஷ்ணுரூப கணபதி, விஷ்ணுரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் சன்னதியில் உலக நன்மைக்காக மகா ரெங்க பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்கள் தினமும் தீப வழிபாடு நடக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று நடக்கும் துலா பாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீராத நோய் உள்ளவர்கள், குடி மற்றும் இதர கெட்ட வழக்கங்களைக் கொண்டவர்களைத் திருத்தும் தீபக்கணபதியாக இவர் உள்ளார்.
பறவைகளை எழுப்ப பூஜை: மூலவர் அபிஷேகத்துக்கு, கோயில் அருகிலுள்ள மலை உச்சியிலுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறினால், பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க கண ஹோமம் நடத்தப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வளரும் கணபதி: வரம் தரும் வரஹஸ்தம், சரணடைந் தோரைக் காக்கும் அபயஹஸ்தம் என இவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தினமும் வெள்ளிக்கவசம் சாத்தப்படும். இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது. கோயில் வாசலில் சிவ பார்வதி கைலாயக்காட்சியை தரிசிக்கலாம்.
திருவிழாக்கள்:
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, மார்கழி பிரம்மோற்ஸவம்.





காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆனைகுட்டே
அருகிலுள்ள இரயில் நிலையம்
பர்க்கூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மங்களூர்