ஆத்தூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
ஆத்தூர் சிவன்கோயில்,
ஆத்தூர், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாருரின் கிழக்கில் உள்ள கீவளூரில் இருந்து தேவூர் செல்லும் பிரதான சாலையில் இலுப்பூர்சத்திரம் என ஒரு நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது ஆத்தூர். சாலையோரத்தில் உள்ளது சிவன் கோயில் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலாக உள்ளது. கிழக்கு நோக்கிய விநாயகர் கோயிலும் அதை ஒட்டினாற்போல் கிழக்கு நோக்கிய சிவனின் கருவறையும் உள்ளது. விநாயகரின் பெயர் செல்வவிநாயகர் இறைவனின் பெயர் தான் தெரியவில்லை. பல லட்சம் செலவு செய்து குடமுழுக்கு செய்யப்பட்ட கோயில்களில் கூட இறைவன் இறைவி பெயர் எழுதப்படுவதில்லை, என்பது வருத்தமான உண்மை. இங்கு இறைவன் மட்டுமே உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். பிரம்மன் இல்லை மதில் சுவரை ஒட்டியபடி கிழக்கு நோக்கி சனிபகவான் உள்ளார். சண்டேசர் சன்னதி உள்ளது. முகப்பில் அகன்ற பெரிய மண்டபமாக கட்டியுள்ளனர், சிறிய விழாக்களை நடத்த ஏதுவாக உள்ளது.





காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி