அக்கரைவட்டம் லக்ஷ்மிநாராயணர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
அக்கரைவட்டம் லக்ஷ்மிநாராயணர் சிவன்கோயில்,
அக்கரைவட்டம், நிரவி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609602.
இறைவன்:
லக்ஷ்மிநாராயணர்
அறிமுகம்:
காரைக்காலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் உள்ள அரசலாற்று பாலத்தை தாண்டி இரண்டு கிமீ தூரம் சென்றவுடன் இடதுபுறம் திரும்பும் சிறிய சாலையில் அக்கரைவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலின் அடுத்த கரையில் உள்ள பகுதி என்தால் அக்கரைவட்டம் என அழைக்கப்பட்டது. இங்குள்ள பெரியகுளத்தின் கிழக்கு கரையில் உள்ளது சிவன்கோயில். திருமலைராயன் மன்னன் கட்டிய 108 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் வடகரையில் ஒரு சிதிலமடைந்த லக்ஷ்மிநாராயணர் கோயில் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் பெரும் சிறப்புடன் விளங்கிய இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தற்போது காட்சியளிக்கிறது. கோயிலை சுற்றிக் கற்கள் சிதறியுள்ளது. மரம் வளர்ந்து கோயிலின் சுவரின் உள்ளே ஊடுருவி கோவிலை மேலும் சிதைத்துள்ளது. மேற்க்கூரை இல்லாமல் திறந்தவெளியில் உள்ளது. கருவறை மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. அதில் லக்ஷ்மிநாராயணர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காலத்தின் மாற்றத்தினால் சிதைந்த உள்ள இக்கோயில் விரைவில் குடமுழுக்குக்காண இறைவனை பிராத்திப்போம்.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அக்கரைவட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி