பூதங்குடி நாகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பூதங்குடி நாகநாதர் சிவன்கோயில்,
பூதங்குடி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
நாகநாதர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
கங்களாஞ்சேரி – நாகூர் சாலையில் நாகூரில் இருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது இந்த பூதங்குடி. வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ளது இந்த கிராமம். நாகூரை சுற்றில் உள்ள பல கிராமங்களில் உள்ள பல கோயில்கள் நாகர்களால் வழிபடப்பட்டவை அதனால் இறைவன் பெயர் நாகநாதர் என்பது பரவலாக காணப்படுகிறது. சிறிய விவசாய கிராமம், பெரும் எண்ணை நிறுவனம் ஒன்று ஊரின் பெரும் வயல் பகுதியை ஆக்கிரமித்துவிட மீதமிருக்கும் இடத்தில் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஊர் முழுதும் வெறுமையும் அமைதியும் நிரம்பி கிடக்கிறது. தனக்கே இல்லாத நிலையில் கோயில் எப்படியிருக்கும் என நான் கோயில் செல்லும் முன்னரே முடிவுக்கு வந்துவிட்டேன். கிழக்கு நோக்கிய சிவாலயம், அருகில் ஒரு PUPSபள்ளி அதுவும் குற்றுயிராக! கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது.
இறைவன் நாகநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி சௌந்தர்யநாயகி தெற்கு நோக்கியுள்ளார் இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது. மண்டபத்தின் கிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். மண்டபத்தின் வெளியில் நந்தி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் துர்க்கை உள்ளனர். இங்கு தக்ஷ்ணமூர்த்தி கையில் நாகத்துடன் இருப்பது சிறப்பு. கோயிலின் தென்மேற்கில் வரசித்தி விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். வடமேற்கில் ஒரு லிங்கமும் அதன் அம்பிகையும் ஒரு நந்தியும் தனித்து வெட்டவெளியில் உள்ளனர். விரைவில் நல்மனதுடையோர் அதற்க்கு ஒரு கொட்டகை செய்து தருவீர்களாக!! எண்ணை சார்த்தப்படாத திருமேனிகள், ஒருகால பூஜைகள் இப்படி நாட்கள் நகர்கின்றன. இதே வளாகத்தில் ஐயனார் கோயில் ஒன்றும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூதங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி