Saturday Dec 21, 2024

திருமணமங்கலம் விசாலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி

திருமணமங்கலம் விசாலேஸ்வரர் சிவன் கோயில் திருமணமங்கலம், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 801

இறைவன்

இறைவன் : விசாலேஸ்வரர்

அறிமுகம்

ஆலங்குடி அனைவருக்கும்தெரிந்த கோயில், அதன் அண்மையில் உள்ளது திருமணமங்கலம் சிவன்கோயில். ஆலங்குடி கோயிலின் வடக்கில் சில தெருக்கள் தள்ளி உள்ளது இக்கோயில். இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்- ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் தான் இந்த திருமணமங்களம். இன்றும் ஆலங்குடி இறைவனின் பிரம்மோற்சவத்தில் திருமண காட்சி இங்கு தான் நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை கொண்டு விளங்குகிறது அருகில் ஓமகுளம் உள்ளது. நடுத்தர அளவுடன் லிங்க மூர்த்தியாய் விளங்குகிறார் இறைவன். திருமண வேண்டுதல்கள் நிறைவேற இங்கு வந்து இறைவனை வணங்கவேண்டும். ஆலங்குடியின் உபகோயில் இது அதனால் ஆலங்குடி இறைவனை வணங்குபவர் இங்கும் வந்து வணங்கினால் தான் நோக்கம் முழுமையடையும். இறைவன் விசாலேஸ்வரர் # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆலங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாபநாசம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top